Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 30)

Author Archives: kumariexpress

World-Largest-aircraft-carrier-Airbus-company-announcement

உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம் ‘ஏர்பஸ்’ நிறுவனம் அறிவிப்பு

துலூஸ், ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ‘ஏர்பஸ்’. உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ ஏ380’ ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது. 500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்களை தயாரிக்க செலவு அதிகம் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் ...

Read More »
In-Iraq-5-IS-Terrorists-killed-Military-Action

ஈராக்கில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலிராணுவம் அதிரடி

பாக்தாத், ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். ...

Read More »
23-feared-dead-in-flood-at-disused-Zimbabwe-gold-mine

ஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் புகுந்த 23 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி என அச்சம்

ஹராரே, ஜிம்பாப்வே நாட்டில் விலை மதிப்புமிக்க பிளாட்டினம், வைரம், தங்கம், நிலக்கரி மற்றும் தாமிரம் போன்றவை அதிகளவில் உள்ளன. இதனால் அவற்றை எடுப்பதற்காக சுரங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் ஹராரே நகருக்கு தென்மேற்கே கடோமா நகரில் தங்க சுரங்கங்கள் சில செயல்படாமல் இருந்து வந்துள்ளன. இதற்குள் சிலர் புகுந்துள்ளனர். இந்நிலையில், சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அவர்களில் 23 பேர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது. மீட்பு பணியாளர்கள் நீரை வெளியேற்றி அவர்களை மீட்க அல்லது உடலை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ...

Read More »
Bride-runs-away-after-robbing-husband-on-wedding-night

70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (70). இவருக்கும் நஜ்மா பிபி (28) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. முஸ்தபாவுக்கு இது இரண்டாம் திருமணம் என்ற நிலையில், நஜ்மா பிபிக்கு ரூ.70000 பணம் மற்றும் முதல் மனைவியின் நகைகளை அவர் கொடுத்தார். இந்நிலையில் முதலிரவில் நஜ்மா பிபி தனது கணவர் முஸ்தபாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்த நிலையில் அவர் மயங்கினார். பின்னர் காலையில் முஸ்தபா எழுந்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், வீட்டில் இருந்த ...

Read More »
US-warns-nations-against-buying-Venezuelan-oil

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன. கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், ...

Read More »
Congress-General-Secretary-for-UP-East-Priyanka-Gandhi-Vadra

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 30 வீரர்களுக்கு பிரியங்கா காந்தி இரங்கல்

புதுடெல்லி, காங்கிரஸ்பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இப்போது அரசியலைப் பற்றி பேசுவது பொருத்தமாகாது என நினைக்கிறேன். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 30 சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடே தோளோடு,தோள் நிற்கும். காங்கிரஸ் பொதுச்செயலாளராக தேர்வான பின் பிரியங்கா காந்தி முதன் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More »