Templates by BIGtheme NET

Author Archives: kumariexpress

Jewelry-Workshop-Owners-Home-9Pound-Handwriting-of

நகை பட்டறை உரிமையாளர் வீட்டில் 9 பவுன் நகை-பணம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை

நாகர்கோவில், நாகர்கோவில் கோட்டார் ஆசாரிமார் தெற்குதெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர், கடந்த 20-ந்தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று அதிகாலையில் முருகன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிமணிகள் மற்றும் ...

Read More »
Supreme-Court-says-On-Anthem-No-Need-To-Stand-At-Cinema-To

திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை: சுப்ரீம்கோர்ட்

புதுடெல்லி: திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் படம் திரையிடப்படும் முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் தேசிய ...

Read More »
Ex-Intel-Chief-Dineshwar-Sharma-Is-PM-Modi-New-Man-For

காஷ்மீர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரியை மத்திய அரசு நியமித்தது. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களை அவசரமாக அழைத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிறப்பு அதிகாரியாக புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்து இருக்கிறது. அவருக்கு மத்திய மந்திரிக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அவர் காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். ...

Read More »
BJP-Offered-Rs-1-Crore-To-Switch-Hardik-Patel-Aide

குஜராத்தில் ‘பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசினர்’: ஹர்திக் படேல் ஆதரவாளர் குற்றச்சாட்டால் பரபரப்பு

ஆமதாபாத்: பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக ஹர்திக் படேல் ஆதரவாளர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. குஜராத்தில் கணிசமாக வசித்து வரும் படேல் இனத்தவர்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி’ (பாஸ்) என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல் தலைமையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த ...

Read More »
Rahul-dubs-GST-as-Gabbar-Singh-Tax-mocks-PM-over-note-ban

ஜி.எஸ்.டி என்பது ‘கப்பார் சிங் டாக்ஸ்’: மோடியை தாக்கும் ராகுல் காந்தி

அகமதாபாத்: பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரி என்பது, கப்பார் சிங் டாக்ஸ் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. இந்நிலையில், காந்தி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரி ...

Read More »
100-days-struggle-of-Tamil-Nadu-farmers-in-Delhi-has-been

டெல்லியில் நடந்துவந்த தமிழக விவசாயிகளின் 100 நாள் போராட்டம் நிறைவடைந்தது

புதுடெல்லி: விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவந்தார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஜூலை 16-ந்தேதி முதல் நடந்துவந்த போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. விவசாயிகள் நேற்று தங்களது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, ‘விவசாயிகள் கழுத்தை அறுக்காதீர்கள்’ என்று கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். நேற்றுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு விவசாயிகள் அனைவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டனர். அய்யாக்கண்ணு கூறுகையில், ...

Read More »