Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 20)

Author Archives: kumariexpress

Manmohan-Singh-attack-on-the-federal-government-fails-to

“வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் தோற்றுவிட்டது” – மத்திய அரசு மீது மன்மோகன் சிங் தாக்கு

புதுடெல்லி, டெல்லியில் நேற்று நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் சீர்குலைவு எல்லாவற்றுக்கும் மேலாக பணித்தளங்களில் பிரிவினை சக்திகள் ஆகியவை இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களாக அமைந்துள்ளன. விவசாயிகளின் தற்கொலைகளும், விவசாயிகள் அடிக்கடி நடத்தி வருகிற போராட்டங்களும் ...

Read More »
The-whole-block-in-Kashmir-denouncing-the-violence-Natural

வன்முறை சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஸ்ரீநகர், காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்து ஸ்ரீநகர் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ரிசர்வ் படையினர்) மீது கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தில் ஆங்காங்கே கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் ஏராளமான காஷ்மீரிகளின் ...

Read More »
Saudi-Prince-Salman-to-visit-India-tomorrow

2 நாள் பயணமாக சவுதி இளவரசர் சல்மான் நாளை இந்தியா வருகை

புதுடெல்லி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லி வரும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை ...

Read More »
Never-Imagined-Son-Would-Be-Suicide-Bomber-Father-Of-Pulwama

இளைஞர்கள் மோசமான பாதையில் செல்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – பயங்கரவாதியின் தந்தை

40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அகமது தாரின் தந்தை குலாம் ஹசன் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதால் எங்களுக்கு மகிழ்ச்சி கிடையாது. வீரர்களை இழந்து அவர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வலி எங்களுக்கு புரிகிறது. இந்த வலியைத்தான் நான் காஷ்மீரில் காலங்காலமாக அனுபவித்து வருகிறோம். என் மகனை இழந்து தவிக்கும் இந்நேரத்தில் இளைஞர்களுக்கு எந்தவிதமான செய்தியும் கூற நான் விரும்பவில்லை. ஆனால், அரசுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், விரைவில் இந்த பயங்கரவாத பிரச்சினைக்கும், வன்முறைக்கும் தீர்வு ...

Read More »
JK-Encounter-underway-in-Pulwama-4-Army-jawans-injured

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு

ஸ்ரீநகர், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பின்க்லான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் ...

Read More »
Released-bad-records-Deactivate-in-the-TIK-TOK-accounts

மோசமான பதிவுகளை வெளியிட்ட டிக்டாக் கணக்குகள் முடக்கம் அமைச்சர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வைத்த கோரிக்கையை ஏற்று அதனை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தேன். அதன்படி அந்த செயலியை உடனே தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே புளூவேல் என்ற உயிரை பறிக்கக்கூடிய ஆபத்தான விளையாட்டு தடை செய்யப்பட்டது போல இதுவும் தடை செய்யப்படும். இதற்கிடையே ...

Read More »