Templates by BIGtheme NET

Author Archives: kumariexpress

Crops-cultivation-in-kanyakumari

ஒருங்கிணைந்த பயிர் ஊட்ட நிர்வாக முறைப்படி சாகுபடி செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம்

நாகர்கோவில், ஏப். 21: ஒருங்கிணைந்த பயிர் ஊட்ட நிர்வாகத்தை பயன்படுத்தி சாகுபடியில் செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: மண் வளத்தையும், நிலத்தின் உற்பத்தி திறனையும் தொடர்ந்து நீண்ட காலம் தக்க வைக்க இயற்பியல் உழவியல், ரசாயனம் மற்றும் உயிரியல் தொடர்பான தொழில் நுட்பங்களை மனித முயற்சியால் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதே ஒருங்கிணைந்த பயிர் ஊட்ட நிர்வாகம் ஆகும். அதன்படி, இயற்பியல் தொழில்நுட்பங்கள் மூலம் மண் கடினத்தன்மை, மணல் சாரியான மண், அதிக களியான மண் ...

Read More »
DGP-sylendra-speech-in-Hindu-college-Silver-ceremony

பெண்களுக்கு சுதந்திரம் தேவை இந்து கல்லூரி விழாவில் ஏடிஜிபி சைலேந்திர பாபு பேச்சு

நாகர்கோவில், ஏப்.21: இந்து கல்லூரி சுயநிதிபரிவு வெள்ளிவிழா நேற்று நடைபெற்றது. இதில் ரெயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டார். நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு 1992ம் ஆண்டு இக்கல்லூரியில் சுயநிதிப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்து கல்லூரியில் சுயநிதிப்பிரிவு தொடங்கப்பட்டு 25வது ஆண்டை முன்னிட்டு சுயநிதி பிரிவுக்கான வெள்ளிவிழா ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் ஆறுமுகம் பிள்ளை தலைமை வகித்தார். ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக ...

Read More »
officer-suspended-in-kuzhithurai-kanyakumari

முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு : குழித்துறை நகராட்சி வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்

மார்த்தாண்டம், ஏப். 21: குமரியில் உள்ள 4 நகராட்சிகளில், மேற்கு மாவட்ட பகுதியில் மிக முக்கிய நகராட்சியாக குழித்துறை விளங்கி வருகிறது. மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. தற்போது ஆணையாளர் உட்பட பல பணியிடங்கள் காலியாக உள்ளன. பொறுப்பு ஆணையராக கணபதி சங்கர் இருந்து வருகிறார். இதனால் நகராட்சியில் பல்வேறு பணிகளில் கடும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை கண்டித்து பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் நடந்த ...

Read More »
Threatened-to-kill-thucklay-kanyakumari

தக்கலை அருகே இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

தக்கலை, ஏப்.21: தக்கலையை அடுத்த கேரளபுரம் வைகுண்டர் சந்திப்பை சேர்ந்தவர் சங்கர் (30). ஒன்றிய இந்து முன்னணி பொது செயலாளராக உள்ளார். கடந்த வாரம் பேயன்குழி கோயில் வளாகத்தல் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். இதனால் இவருக்கும், மற்றொரு தரப்புக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை கூறி மர்ம நபர் ஒருவர் செல்போனில் சங்கரை மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் கொலை செய்து விடுவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இது தொடர்பாக சங்கர் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் ...

Read More »
Arunachala-engineering-college-Award_Winners

அருணாச்சலா கல்லூரி மாணவிகளுக்கு விருது

திங்கள்சந்தை,ஏப்.21: வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு. அவர்களது பல்வேறு சாதனைகளை பாராட்டி ஐஎஸ்டி மற்றும் ஐஈடி போன்ற பன்னாட்டு அமைப்புகள் விருதுகள் வழங்கியது. இந்த விருதுகள் அவர்களது புதிய கண்டுபிடிப்புகள், தலைமை பண்பு, தனித்திறமைகள் பல்கலை அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றமை மற்றும் அவர்களது கல்வி சார்ந்த மற்றும் சாராத தனித் திறமைகளுக்காக வழங்கப்பட்டது.விருதுகள் பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் முனைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் முனைவர் ஜோசப் ஜவகர், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியைகள், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

Read More »
Accident-in-karungal-kanyakumari

கருங்கல் அருகே பைக் விபத்தில் 2 மாணவர்கள் படுகாயம்

கருங்கல், ஏப். 21: கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்வர் தீபன் பிராங்ளின். இவரது மகன் அஜய்(19). இவரது நண்பன் கானாவூர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மகன் ஜோயல்(18). மாணவர்களான இவர்கள் இருவரும் சம்பவத்தன்று ஒரு பைக்கில் பாலவிளை பகுதி வழியாக சென்றனர். அப்போது எதிரே மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் இருந்து பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக பைக்கும் வேனும் மோதியதில் பைக்கில் சென்ற மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் உடனே இருவரையும் ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.