Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 10)

Author Archives: kumariexpress

A-student-kidnapped-by-50-lakh

ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் – ஆட்டோ டிரைவர் கைது

சென்னை, தர்மபுரியில் 50 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் – மேச்சேரி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலராக பணியாற்றும் ராஜா என்பவரின் 14 வயது மகன் பிரகதீஷ்வரன், 2 நாட்களுக்கு முன், ஆட்டோவில் கடத்தப்பட்டார். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, வெங்கம்பட்டி என்ற இடத்தில், ஆட்டோவில் இருந்து கீழே குதித்த பிரகதீஷ்வரன், அப்பகுதியில் உள்ள தேவராஜ் என்பவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தான். பின்னர், ...

Read More »
Said-sexual-harassment-Sri-Reddy-who-plays-in-the-film

பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி

தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் லாரன்ஸ் மறுத்தார். நடிப்பு திறமையை வெளிப்படுத்தினால் அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் லாரன்சின் அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஸ்ரீரெட்டியே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘லாரன்சை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இனிமையாக என்னை வரவேற்றார் நிறைய குழந்தைகள் அங்கு மகிழ்ச்சியோடு இருந்ததை பார்த்தேன். எனக்காக அவர்கள் பிரார்த்தனை செய்தனர். அங்கு நடித்து காண்பித்தேன். ...

Read More »
Actors-distortion-Hindi-films-stalled-by-Me-too

நடிகர்கள் விலகல் : ‘மீ டூ’வால் முடங்கிய இந்தி படங்கள்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான டைரக்டர்கள் படங்களில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இந்தியில் சில பெரிய பட்ஜெட் படங்கள் முடங்கி உள்ளன. முகல் படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் மீது நடிகை கீதிகா பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் முகல் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த அமீர்கான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி விட்டார். அதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இயக்குனர் சஜித்கான் இயக்கும் ஹவுஸ்புல்–4 ...

Read More »
Chinmayi-sexual-charge-apology-Comedian

சின்மயி பாலியல் குற்றச்சாட்டு : மன்னிப்பு கேட்ட நகைச்சுவை நடிகர்

டி.எம்.கார்த்திக் மீது பாலியல் புகார் சொல்லப்பட்டது. அதை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலியல் புகாருக்கு ஆளான டி.எம்.கார்த்திக் டுவிட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:– ‘‘நான் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மீ டூ வில் புகார்கள் வந்துள்ளன. பெண்களிடம் நான் மரியாதையாகவே நடந்து இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விருப்பத்துடன்தான் இருந்தனர் என்று நான் நினைத்தது தவறு என்பதை உணர்கிறேன். சில நேரங்களில் நான் அத்துமீறி இருக்கலாம். ஆனாலும் ...

Read More »
Actor-Siddharth-opposed-to-Radha-Ravi-controversy-speech

‘மீ டூ’வை எதிர்க்கும் வில்லன்கள் : ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு?

தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பெண் இயக்குனர் லீனா மணிமேகலை ஆகியோர் பாலியல் புகார் கூறியுள்ளனர். நடிகர் சித்தார்த் ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் ‘மீ டூ’ வில் பாலியல் புகார் கூறிய சின்மயிக்கு பதில் அளித்து படவிழாவில் பேசிய நடிகர் ராதாரவி, ‘மீ டூ’ வில் சின்மயி போன்றவர்கள் பாலியல் குற்றங்களை பதிவிடுவது சினிமாவுக்கு அசிங்கம் என்றும், நமது கலாசாரத்துக்கு ‘மீ டூ’ இயக்கம் தேவையற்றது என்றும் கூறினார். ராதாரவி பேச்சை நடிகர் சித்தார்த் டுவிட்டரில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ...

Read More »
Junior-Olympic-Games-Tamil-Nadu-Athletic-Bronze--The

இளையோர் ஒலிம்பிக்: தமிழக தடகள வீரர் பிரவீனுக்கு வெண்கலம் – ‘விவசாய தொழிலாளியின் மகன் சாதனை’

பியூனஸ் அயர்ஸ், 3-வது இளையோர் ஒலிம்பிக் (யூத்) போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை நீளம் தாண்டுதல்) கியூபா வீரர் அலெக்ஜான்ட்ரோ டியாஸ் (34.18 மீட்டர்) தங்கப்பதக்கமும், நைஜீரியாவின் எம்மானுல் ஒரிட்ஸ்மீவா (31.85 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். தமிழகத்தை சேர்ந்த பிரவீன் வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த போட்டி புதிய விதிமுறைப்படி இரண்டு பகுதியாக நடத்தப்பட்டது. இதன்படி முதல் பகுதியில் அதிகபட்சமாக 15.84 மீட்டர் தூரமும், 2-வது ...

Read More »