Templates by BIGtheme NET

Author Archives: kumariexpress

ஜுன் 1 முதல் ஆதார் உள்ள விவசாயிகள் மட்டுமே உரம் வாங்க முடியும்

மதுரை: பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் துறை இணைந்து வரும் ஜுன் 1-ந்தேதி முதல் விவசாயிகள், ஆதார் எண்ணுடன் கைரேகையை விற்பனை எந்திரத்தில் பதிவு செய்து உரம் வாங்கும் முறையை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக முதல் கட்ட அறிமுக பயிற்சி தனியார் மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர்களுக்கு உர தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் மூலம் ...

Read More »

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெ.தீபா ‘திடீர்’ அழைப்பு

சென்னை, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனித புனிதவதி புரட்சித்தலைவி அம்மா 6-வது முறையாக சரித்திர சாதனை படைத்த முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அம்மா ஆட்சியையும், கட்சியையும் நம்மிடம் கொடுத்துவிட்டு மீளாத்துயரில் அம்மா நம்மை விட்டு சென்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அம்மா தமிழக மக்களின் வாழ்வாதாரமாக அவதரித்து சமூக விஞ்ஞானியாக வாழ்ந்து காட்டினார். அம்மாவின் மறைவிற்குப் பின் லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களின் அன்பான அழைப்பை ஏற்று அம்மா அவர்கள் விட்டு ...

Read More »

பாலைவனம் போல் காட்சி அளிக்கும் பூண்டி ஏரி

ஊத்துக்கோட்டை: பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில் 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். பருவ மழை பொய்த்து போனதாலும், கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வரத்து நின்று போனதாலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் 4 ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த மாதமே சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது. இன்று காலை நிலவரப்படி ...

Read More »

பாகூர் அருகே 12 மதுக்கடைகள் சூறை – தீவைப்பு

பாகூர்: புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ளது சோரியாங்குப்பம் கிராமம். கடலூர் நகரை ஒட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது. கடலூர் சாவடியில் இருந்து சோரியாங்குப்பம் வருவதற்கு பெண்ணை ஆற்றில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சோரியாங்குப்பத்தில் 10 பிராந்தி கடைகள், 2 சாராய கடைகள் உள்ளன. கடலூர் மாவட்ட மக்கள் பெருமளவில் இங்கு வந்து மது குடிப்பது வழக்கம். இந்த மதுக்கடைகளுக்கு வருபவர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எனவே இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் ...

Read More »

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி இருந்தார். அதன் விவரம் வருமாறு:- மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கை முறை எந்த ஒளிவுமறைவின்றி நடந்து வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வானது நகர் ...

Read More »

அதிவேக 5ஜி வழங்க தயாராகும் ஆப்பிள்

கலிபோர்னியா: அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி மில்லிமீட்டர் அலைகற்றை வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் சோதனை செய்ய ஆப்பிள் நிறுவனம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் நெட்வொர்க் பேண்ட்வித் மற்றும் வேகத்தை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பதிவு செய்துள்ள விண்ணப்பத்தில் சோதனைகள் சார்ந்து அதிகபட்ச தகவல்கள் இடம்பெறவில்லை என்றாலும், இந்த சோதனைகளின் மூலம் எதிர்கால 5ஜி நெட்வொர்க்களில் சாதனங்கள் எவ்வாறு வேலை செய்யும் என்பது சார்ந்த தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த சோதனைகளை சிலிகான் ...

Read More »