பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » சினிமா செய்திகள் » காதல் தோல்வியில் அனுஷ்கா
Anushka-in-love-failure

காதல் தோல்வியில் அனுஷ்கா

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அனுஷ்காவுக்கு இப்போது வயது 38. பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ், தொழில் அதிபர், ரஞ்சி போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஆகியோருடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன.

தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விவாகரத்து செய்தவர். இந்த திருமண கிசுகிசுக்களை மறுத்துள்ள அனுஷ்கா ஏற்கனவே ஒருவருடன் ஏற்பட்ட காதல், தோல்வியில் முடிந்த தகவலை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை. அந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை சொல்லி இருப்பேன். இப்போதும் அந்த காதலுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். எனக்கு பிரபாசை 15 வருடங்களாக தெரியும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதாலும், படத்தில் ஜோடியாக நடித்ததாலும் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை.இவ்வாறு அனுஷ்கா கூறினார்.