Home » சினிமா செய்திகள் » பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டா நடிகை ஸ்ரீபிரியா…!
202201101752189072_Booster-taken-today-sripriya_SECVPF

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டா நடிகை ஸ்ரீபிரியா…!


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida2021/includes/post-meta.php on line 3
நாடு முழுதுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள், 60 வயதுத்துக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தனது  டுவிட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். நடிகை ஸ்ரீபிரியா தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் 1980களில் ஹிரோயினாக களம் இறங்கி களக்கியவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், செவாலிய சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீபிரியா 1988-ம் ஆண்டு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனா என்ற மகனும் சிநேகா என்ற மகளும் உள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த ஸ்ரீபிரியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
நடிகை ஸ்ரீபிரியா நடிகையாக மட்டுமல்லாமல் சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தை அதே பெயரில் தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக வைத்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida2021/single.php on line 65