Home » சினிமா செய்திகள் » ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார் ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு
202104070833428421_Actor-Rajinikanth-casts-his-vote-in-Aayiram-Vilakku_SECVPF

ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார் ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று அவர் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்து, காத்திருந்த நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அவர் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் காலை 7.05 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வந்தார்.
பின்னர் அவர் பத்திரிகையாளர்களை பார்த்து கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் அவர் வேகமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் எழிலன், பா.ஜ.க. சார்பில் குஷ்பு சுந்தரும், மக்கள் நீதி மையம் சார்பில் கே.எம்.ஷரீப் உள்பட 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.