Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » 7 பேரை கொன்ற சிறுத்தைப்புலி சுட்டுக்கொல்லப்பட்டது
The-leopard-that-killed-7-people---Shooting

7 பேரை கொன்ற சிறுத்தைப்புலி சுட்டுக்கொல்லப்பட்டது

நாசிக்,

மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்ட காட்டுப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று அடிக்கடி வார்கடே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்ததுடன், மனித வேட்டையாடியது.

இதனால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சினர். சிறுத்தைப்புலியை உடனடியாக பிடிக்க வனத்துறையினரை வலியுறுத்தினர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தைப்புலியை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையே இம்மாதம் 7–ந் தேதி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த குணால் பிரகாஸ் என்ற 6 வயது சிறுவனை அந்த சிறுத்தைப்புலி வாயில் கவ்வி சென்று கொன்றது. இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறுவர்கள், பெண்கள் உள்பட 7 பேரை கொன்றது. இதையடுத்து அந்த சிறுத்தைப்புலியை சுட்டுக்கொல்ல வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் காட்டை விட்டு வெளியே வந்த அந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ச்சியாக மனிதர்களை கொன்று வந்த சிறுத்தைப்புலி வனத்துறையினரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானதால், அந்த கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.