Home » உலகச்செய்திகள் » 6 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை நீங்கள் மீட்டெடுத்தால் நான் ராஜினாமா செய்வேன் – சவால் விட்ட இலங்கை பிரதமர்!

6 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை நீங்கள் மீட்டெடுத்தால் நான் ராஜினாமா செய்வேன் – சவால் விட்ட இலங்கை பிரதமர்!


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னிய செலாவணி இல்லாததால் புதிதாக எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க முடியவில்லை. அத்துடன் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை. இப்படி எரிபொருள் இறக்குமதிக்காக அன்னிய செலாவணி அதிக அளவு தேவைப்படுவதால் அதை ஈட்டுவது குறித்து அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில்,6 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்குமாறு ஜேவிபி கட்சி தலைவர் திஸாநாயகேவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சவால் விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், நாட்டின் பொருளாதாரத்தை 6 மாதங்களில் மீட்டெடுப்பேன் என்று ஜனதா விமுக்தி பேராமுனா கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக உள்ள அனுரா குமாரா திஸாநாயகே பெருமையாக கூறினார். இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பிரதமர், உங்களிடம் உள்ள திட்டத்தை நாடாளுமன்றத்தில் கொடுத்தால், அவற்றை செயல்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும். இதற்காக உங்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் கிடைக்கலாம் என்று கூறினார். மேலும், அவர் அவ்வாறு செய்துவிட்டால், தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65