Home » வர்த்தகம் செய்திகள் » 6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..!
image 25

6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..!

கொரோனா பிடியில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வகும் நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையை ஊக்குவிக்கவிக்கவும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரவும் மோடி தலைமையிலான அரசு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து இருந்து வரும் நிலையில், இந்தத் திட்டம் மூலம் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இல்லாமல் மே12 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்புக்குப் பின் அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இது பங்குச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.