Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » 5 அமர்வுகளின் விசாரணை தாமதம் – சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5-sessions-trial-delay--Furore-in-the-Supreme-Court

5 அமர்வுகளின் விசாரணை தாமதம் – சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உள்ளிட்ட 5 அமர்வுகள் விசாரணையை நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கின. இந்த 5 அமர்வுகளும் விசாரணையை வழக்கத்துக்கு மாறாக 11.30 மணிக்கு தொடங்கின. மற்ற அமர்வுகள் வழக்கம்போல வழக்கு விசாரணைகளை நடத்தின.

விளம்பர பலகையில் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் கோர்ட்டு எண் 1 முதல் 5 வரையில் உள்ளவை காலை 11.30 மணி வரையில் இயங்காது என கூறப்பட்டிருந்தது.

ஏதோ குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மூத்த நீதிபதிகள் விவாதித்துக்கொண்டிருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. 5 அமர்வுகளில் வழக்கு விசாரணை தாமதத்தால் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு நிலவியது.

நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மொத்தம் உள்ள 15 அமர்வுகளும் காலை 10.30 மணிக்கு பதிலாக 15 நிமிடங்கள் தாமதமாக 10.45 மணிக்கு செயல்பட தொடங்கியது நினைவுகூரத்தக்கது.