Templates by BIGtheme NET
The-28hour-countdown-started

28 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை,

பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இதற்கான 28 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது.

தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான 30 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

இதில் 710 கிலோ எடைகொண்ட கார்ட்டோ சாட் செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணில் செலுத்துகிறது. இது இஸ்ரோ அனுப்பும் 100-வது செயற்கைகோளாகும்.

இதற்கான ஆயத்தபணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ராக்கெட் ஏவுவதற்கான 28 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 9.29 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

ராக்கெட் ஏவுவதற்காக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.எஸ்.எல்.வி.-சி40 ராக் கெட் இன்று காலை 9.29 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஆயத்த ஏற்பாடுகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்துவருகிறது. பி.எஸ்.எல்.வி.-சி39 ராக்கெட் ஏவுவது தோல்வியடைந்தது. அதில் ஏற்பட்ட தவறுகளை முழுமையாக ஆராய்ந்து நிவர்த்தி செய்து இந்த புதிய ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறோம். இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறக்கும். தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ புதிய தலைவராக சிவன்நியமிக்கப்பட்டு உள்ளார். இஸ்ரோவின் வரலாறு பல தலைவர்களை கண்டு உள்ளது. ஒவ்வொரு தலைவர்களின் நிர்வாகத்திலும் இஸ்ரோ மிக சிறப்பாக செயல்பட்டு அடுத்தகட்டத்தை நோக்கி முன்னெடுத்து செல்கிறது. அதுபோல் சிவன் தலைமையிலும் இஸ்ரோ மிக சிறப்பாக செயலாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.