Templates by BIGtheme NET
Laobourss

180 நாட்களுக்குள் கடனை திரும்ப செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பின்னலாடை துறையினர் வரவேற்பு

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி விதிப்புக்கு பின் பல்வேறு தொழில்கள் முடக்கம் அடைந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கியில் தொழிலுக்காக பெறப்படும் கடனை 90 நாட்களில் திரும்ப செலுத்த வேண்டும் என்பதை, 180 நாட்கள் வரை தளர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதை தொழில்துறையினர் வரவேற்றிருக்கின்றனர்.

இது தொடர்பாக சிஸ்மா அமைப்பின் கே.எஸ்.பாபுஜி கூறியதாவது: பின்னலாடை தொழில்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு உள்நாட்டு வர்த்தகம், சிறு ஏற்றுமதியாளர்களுக்கு பயனளிக்கும். திருப்பூரில் பின்னலாடை சார்ந்த சிறு, குறு, உப தொழில்கள் ஏராளமாக உள்ளன. ரூ.5 லட்சம் தொடங்கி ரூ.1 கோடி வரை கடன் பெற்று வர்த்தகம் செய்பவர்களால் சுயதொழில், தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த 30 கோடி பேர் உள்ளோம். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது என்றார்.

முக்கிய முடிவு

திருப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் எம்.ஜெ.துளசிராமன் கூறும்போது,“வாராக்கடன் என அறிவித்து தொழில் செய்பவரின் வங்கிக் கணக்கை முடக்குவதைவிட, இந்த அறிவிப்பால் வங்கிக் கண க்கு முடங்காமல் தொழிலை சிறப் பாக நடத்தமுடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.