Home » கன்னியாகுமரி செய்திகள் » 12 பேருக்கு கொரோனா

12 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கி உள்ளது. இருப்பினும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் தொற்று பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 635 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் 6 பேரும், பெண்கள் 6 பேரும் என மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.