Templates by BIGtheme NET
Home » விளையாட்டுச்செய்திகள் » ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி
Hong-Kong-Badminton-Srikanth-failure

ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

கோவ்லூன்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 17-21, 13-21 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோட்டோவிடம் தோற்று வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 15-21, 21-19, 11-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் லீ சுக் யிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.