Templates by BIGtheme NET
parvathipuram-bridge

வேகமாக வளர்ந்துவரும் மேம்பாலம் வாகனம் மோதினாலும் சேதமடையாது பொறியாளர் தகவல்

மார்த்தாண்டம், பிப். 12: மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மார்த்தாண்டத்தில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ₹149 கோடியில் இந்த மேம்பாலம் அமைகிறது. தற்போது உள்ள சாலையின் நடுவில் ராட்சத இரும்பு தூண்கள் ‘டி’ வடிவில் அமைக்கப்பட்டு, அதன்மேல் இந்த பாலம் உருவாகிறது. தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக இது அமையும்.

குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைய உள்ளது. இந்த மேம்பாலம் முற்றிலும் புதிய ெதாழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. இதற்காக பாண்டிச்சேரியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெட்டீரியல்கள் கொண்டுவரப்பட்டு பால வேலைகள் நடந்து வருகிறது. மேம்பாலத்தை தாங்கிப்பிடிக்கும் பில்லர்கள் அமைக்க 110 இடங்களில் துளையிட்டு காங்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டது. இதன் மேல் அமைக்கப்படும் 110 ஸ்டீல் பில்லர்களும் சுமார் 2.5 முதல் 8.5 மீட்டர் உயரம் உடையவை.

2 பில்லர்களுக்கு இடையேயான நீளம் 24 மீட்டர்கள். சில இடங்களில் இது சற்று வேறுபடும். இதில் 90 சதவீத பில்லர்கள் அமைக்கப்பட்டு விட்டன. பில்லர்களின் மேல் அமையும் பீம்களின் ேமல் மேல் 12 மீட்டர் அகலத்தில் சாலை அமையும். இதற்காக பீம்களின் மேல் 22 மி.மீ. கனமான இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு, அதன்மேல் 0.75 அடி உயரத்தில் காங்கிரீட் போடப்படுகிறது. மேம்பால சாலையின் பக்கவாட்டுச்சுவர் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்படுகிறது. தற்போது மார்த்தாண்டம் சிஎஸ்ஐ காம்ப்ளக்ஸ் பகுதி முதல் வெட்டுவெந்நி வரை 4 பில்லர்களுக்கு இடையேயான பகுதியில் இரும்பு கார்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக அடுத்தடுத்த பில்லர்களில் கார்டர்கள் பொருத்தும் பணி இன்று தொடங்குகிறது. மார்ச் மாதத்துக்குள் காரிடர்கள் பொருத்தும் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது. மேம்பால இரும்பு பில்லர்களின் உள்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்துக்கு காங்கிரீட் கலவையால் நிரப்பப்படும். இது மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வை தடுக்கும். மேலும், கீழ் பகுதியில் வாகனங்கள் ஏதாவது பில்லரில் மோதினாலும் பாலம் சேதமடையாமல் தடுக்கும் என பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுபோல மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து கருங்கல் சாலையில் சாய்வாக இறங்கும் பகுதியில் 9 காங்கிரீட் பில்லர்கள் அமைக்கப்பட வேண்டும். இவற்றில் 7 பில்லர்கள் அமைக்கப்பட்டுவிட்டன. மற்ற பணிகளும் வேகமாக முடிக்கப்படும் என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நவீன தொழில்நுட்பத்தில் இரும்பு மற்றும் காங்கிரீட் கலந்த கலவையாக மார்த்தாண்டம் மேம்பாலம் வேகமாக வளர்ந்து வருகிறது. மேம்பாலத்தில் வாகனங்கள் இயங்க தொடங்கி விட்டால் மார்த்தாண்டத்தின் போக்குவரத்து நெரிசல் காணாமல் போய்விடும். அதுபோல மேம்பால பணிகளால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் முடிவுக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.