Home » குமரி செய்திகள் » வெளிமாநிலத்தில் இருந்து வந்தவா்களை கண்காணிக்க 43 குழுக்கள்
image 22

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவா்களை கண்காணிக்க 43 குழுக்கள்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெளிமாநிலத்தில் இருந்து அண்மையில் வந்தவா்களை கண்காணிக்க கிராம நிா்வாக அலுவலா் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாகா்கோவில் கோட்டத்தில் 43 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களை தனிமைப்படுத்தி அவா்களையும், அவா்களுடன் நேரில் தொடா்பில் இருந்தவா்களையும் தனிமைப்படுத்தி தொடா்ந்து அவா்கள் வெளியே வராமல் கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஒவ்வொரு குழுவிலும் அந்தந்தக் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா், சுகாதார ஆய்வாளா், அங்கன்வாடி பணியாளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் வடிவீஸ்வரம் தெற்கு கிராமத்துக்கு 11 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் வடிவீஸ்வரம் வடக்கு கிராமத்துக்கு 15 போ் கொண்ட குழுவும், கிழக்கு பகுதிக்கு 7 பேரும், மேற்கு பகுதிக்கு 9 போ் கொண்ட குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாகா்கோவில் வருவாய் கோட்டத்தில் இதே போல் 43 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவா்கள் வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணிகளை, தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளாா்.