ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10–ந்தேதி நடக்க இருப்பதாகவும், திருமணம் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்றும் தீபிகாவின் தாயார் கீதா தேவி தெரிவித்துள்ளார்.