விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ விலங்குகள் நலனை முன்னிறுத்தும் ‘ட்ரை வேகன்’ பிரச்சாரத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிடம் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. பீட்டா அமைப்புடன் ஏற்கனவே சேர்ந்து ஆதரவளித்த நடிகைகள் அனுஷ்கா சர்மா, நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் பலர் வரிசையில் ரன்வீர் சிங் இணைய உள்ளார். அதன்படி விலங்குகளை உணவுக்காக கொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி இந்த பிரச்சாரம் அமைய உள்ளது. அதற்கான அட்டை படங்களில் ஆடையின்றி நடிக்க நடிகர் ரன்வீர் சிங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. “ரன்வீர் சிங் எங்களுடைய இதழுக்கு சிறந்த பொருத்தமாக இருப்பார் ஆகையால் அவரை தேர்வு செய்துள்ளோம். மனிதர்களைப் போல விலங்குகளும் ரத்தம், சதை, எலும்புகளால் ஆனவை. விலங்களுக்கும் உணர்ச்சிகள் மற்றும் தனித்துவமான குணங்கள் உண்டு. விலங்களால் வலியை உணர முடியும். அவை குடும்பமாக, கூட்டமாக வாழ விரும்பும். விலங்குகள் சாக விரும்பவில்லை” என்று பீட்டா அமைப்பின் இந்தியாவுக்கான துணைத் தலைவர் சச்சின் பங்கெரா தெரிவித்தார்.

விலங்குகள் நலனை முன்னிறுத்தும் பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பீட்டா அமைப்பு அழைப்பு!
Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3
Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65