Home » விளையாட்டுச்செய்திகள் » விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரிபகினா காலிறுதிக்கு தகுதி..!

விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரிபகினா காலிறுதிக்கு தகுதி..!


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார். இந்த போட்டியில் ஹாலெப் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் படோசாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரிபகினா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதினார். இந்த போட்டியில் மார்டிக்கை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று ரிபகினா காலிறுதிக்கு முன்னேறினார்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65