பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » வாழ வழி தெரியாமல் குளத்தில் விழுந்து தாய் மகள் தற்கொலை
146

வாழ வழி தெரியாமல் குளத்தில் விழுந்து தாய் மகள் தற்கொலை

சுசீந்திரம் அருகே தந்தை இறந்ததால் வறுமை காரணமாக வாழ வழி தெரியாமல் குளத்தில் விழுந்து தாய் மகள் தற்கொலை. கைகளை கட்டிக்கொண்டு தாயும் இரு மகள்களும் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக உயிருடன் மீட்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளைய நயினார் குளத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி இருப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற போலீசார் மூன்று பேரையும் நீரில் இருந்து மீட்டனர். இதில் ஒருவர் உயிருடனும் 2 பேர் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டனர்.

உயிருடன் இருந்த பெண் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்டவரிடம் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் முருகன் 80. கூலி தொழிலாளியான இவருக்கு பங்கஜம் 70 என்ற மனைவியும், மாலா 48, சச்சு 40 என்ற மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை. தந்தையின் அரவணைப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் வடிவேல் முருகன் தவித்து வந்தார்.

இதனால் மனைவி மற்றும் மகள்கள் சரியான உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில் கடுமையாக நோயினால் பாதிக்கப்பட்ட வடிவேல் முருகன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனால் அவரது மனைவி மற்றும் மகள்களை வறுமை காரணமாகவும் வாழவழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, நாகர்கோவில் அடுத்த இளைய நயினார் குளத்தில் கைகளை ஒருவருக்கு ஒருவர் பாவாடை நாடாவால் கட்டி கொண்டு குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்று உள்ளனர். அப்போது பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். போலீசார் வந்து இவர்களை மீட்டத்தில் சச்சு மட்டும் பிழைத்துக் கொண்டார். மற்ற இருவரும் இறந்துள்ளனர். சச்சுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த முதியவரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.