Templates by BIGtheme NET
paytm

வாடிக்கையாளர் தகவலை பகிரமாட்டோம்: பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு

டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான பேடிஎம் தங்களது வாடிக்கையாளர் தகவல் களை முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடம் ஒருபோதும் பகிரமாட்டோம் என தெரிவித்துள்ளது. தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமித்து வைத்திருப்பதாகவும், இதனை வெளியில் இருந்து யாரும் அணுகமுடியாது என்றும் கூறி யுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான நரேந்திர ஜாதவ், பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனம் பங்குகளை வைத்திருப்பதாகவும் இதன்மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் ஏற்படும் எனவும் மாநிலங் களவையில் தெரிவித்திருந்த நிலையில் பேடிஎம் இந்த விளக் கத்தை அளித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களை யின் பூஜ்ஜிய நேரத்தில் உரை யாற்றிய ஜாதவ், பேடிஎம் நிறுவனத் தின் மூலமாக வங்கி அல்லாத பிற சேவைகளை வழங்கும் நிதி நிறுவனத்தை (என்பிஎஃப்சி) இந்தியாவில் ஆரம்பிக்க அலிபாபா நிறுவனம் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான இந்திய மக்களின் தகவல்களை சீன நிறுவனம் கைப்பற்றும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.