Home » இந்தியா செய்திகள் » வாஜ்பாயின் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவு
100Rupee-Coin-With-Atal-Bihari-Vajpayees-Portrait-To-Be

வாஜ்பாயின் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி,

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க-வின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் ஆகஸ்ட் 17-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை நாடு முழுவதுமுள்ள ஆறுகளில் கரைக்கப்பட்டது.

இந்நிலையில் கவுரவப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த 100 ரூபாய் நாயணம் 35 கிராம் எடையுடன், ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

100 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வராது. 100 ரூபாய் நாணயத்தில், 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, ஐந்து சதவீதம் நிக்கல், ஐந்து சதவீதம் துத்தநாகம் கலந்து உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.