Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » வருவாய் துறை சான்றிதழ்களை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் : கலெக்டர் தகவல்
Introduction-of-Revenue-Department-certificates-to-the-website-Collector-Information

வருவாய் துறை சான்றிதழ்களை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் : கலெக்டர் தகவல்

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்திலுள்ள 191 இ-சேவை மையங்கள் மூலமாக தற்போது 20 வருவாய்த்துறை சான்றிதழ்கள் பட்டா மாறுதல் மற்றும் சமூகநலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன். இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கங்கப்படும் 20வருவாய்த்துறை சான்றிதழ்களான விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், கடன் கொடுப்போர் உரிமம்,

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிடம் மற்றும் இருப்பிடம் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய சேவைகளை தற்போது பொதுமக்கள் தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட 20 சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுமக்கள் https://www.tnesevai.tn.gov.in/Citizen என்ற இணையதள முகவரியை அணுகவும். மேலும், UMANG என்னும் ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் பொதுமக்கள் வருமான சான்றிதழ், சாதிசான்றிதழ், பிறப்பிடம் மற்றும் இருப்பிடம் சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்களையும் தங்கள் கைப்பேசி மூலமாக விண்ணப்பித்து பெறலாம். இதற்கான சேவை கட்டணமாக ரூ60ஐ இணையதள வங்கி முறை அதாவது இன்டர்நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.