Home » குமரி செய்திகள் » ரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்
02

ரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மோசமான ரோஷன் அரிசி வழங்கப்படுவதாக நாகர்கோவில் எம்எல்ஏ மாவட்ட வழங்கல் அலுவலரிடம் முறையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் ரேஷன் அரிசி சில நியாயவிலை கடைகளில் மோசமானதாக வழங்கப்பட்டு வருகிறது. இப்படி வழங்கப்படும் ரேஷன் அரிசியை மாற்றி நல்ல அரிசியை வழங்க வேண்டும் என்று நாகர்கோவில் எம்எல்ஏ சுரேஷ் ராஜன் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் முறையிட்டார்