Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் இன்றுமுதல் வேட்டி வாரம் கொண்டாட்டம்
RAMRAJ-shirt-2019

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் இன்றுமுதல் வேட்டி வாரம் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதிலும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் ஜனவரி 1 முதல் 7-ஆம் தேதி வரையில் வேட்டி வாரம் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி அந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பான “கல்ச்சர் கிளப்’ வேட்டியும், மேட்சிங் சட்டையும் ரூ. 700 }க்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், நமது கலாசாரத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், ஒவ்வோர்ஆண்டும் ஜனவரி 1 முதல் 7-ஆம் தேதி வரையில் வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் அடையாளமான வேட்டிகளை இளைஞர்கள் அனைவரும் பாரம்பரிய உடையாக அணிய வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு வேட்டி வாரத்தையொட்டி, “கல்ச்சர் கிளப்’ என்ற ஃபேன்சி பார்டர் வேட்டியும், மேட்சிங் கலர் சட்டையும் ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த வேட்டி, சட்டைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளிலும் ஜனவரி 1முதல் விற்பனை செய்யப்பட உள்ளன என்றார்.