Home » உலகச்செய்திகள் » ரஷியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புதிதாக 8,894 பேருக்கு நோய்த்தொற்று
image 22

ரஷியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புதிதாக 8,894 பேருக்கு நோய்த்தொற்று

ரஷியாவில் 24 மணி நேரத்துக்குள் புதிதாக 8,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 84 பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த பாதிப்புடன் சேர்ந்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,448 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 150 பேரின் உயிரையும் அங்கு கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,249 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.