Templates by BIGtheme NET
train-time-changed-in-nagercoil-kanyakumari-lastest-news

ரயில் கால அட்டவணையில் வெளியிட கோரிக்கை

நாகர்கோவில், ஏப். 16: மதுரை-சென்னை துரந்தோ ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சென்னை வாழ் கிறிஸ்தவ பேரவை செயலாளர் சேம் மனோகர் சார்பில், ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வேயில் சென்னை – நிசாமுதீன், சென்னை-கோவை, எர்ணாகுளம்-மும்பை, எர்ணாகுளம்-நிசாமுதீன் (புதுடில்லி), மதுரை -சென்னை, திருவனந்தபுரம் – சென்னை வழித்தடங்களில் துரந்தோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் இடையே வரவேற்பு உள்ளது. அதேநேரத்தில், இந்த துரந்தோ ரயில்கள் இடைப்பட்ட நிலையங்களில் நிற்காமல் செல்வதால் மற்ற பகுதிகளை சார்ந்த பயணிகள் பயணம் செய்ய முடியாது. எனவே, சில இடங்களில் துரந்தோ ரயில்கள் நஷ்டத்தில் இயங்கின. அதன்படி, ஒரு சில இடங்களில் நஷ்டத்தில் இயங்கும் துரந்தோ ரயில்களை நிறுத்திவிட்டு வேறு பெயர்களில் இயக்கப்பட்டன.

மதுரை துரந்தோ ரயில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இன்றி அதிகபடியான நாட்கள் காலியாகவே இயக்கப்பட்டு வந்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாதலால், இந்த ரயிலை முழுவதும் குளிர்சான பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்து கூடுதல் நிறுத்தங்களுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மதுரை – சென்னை துரந்தோ ரயில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் தற்போது சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மதுரை – சென்னை துரந்தோ ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து அனைத்து முக்கிய ‘ஏ’ பிரிவு ரயில் நிலையங்களிலும் நின்று, தினசரி ரயிலாக மாற்றி செல்லத்தக்க வகையில இயக்க வேண்டும். அக்டோபர் மாதம் வெளியிடப்படும் ரயில்கால அட்டவணையில் இந்த ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

ராஜதானி, கரீப் ரத் என்று சொல்லப்படும் ஏழைகளின் ரதம், சதாப்தி ரயில், டொரோண்டோ ரயில், ஜனசதாப்தி, இரண்டு அடுக்கு பெட்டி ரயில்கள் என்ற பெயர்களில் பல்வேறு ரயில்கள் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இயக்கப்படும் இதுபோன்ற அனைத்து ரயில்களும் சென்னையுடன் நின்றுவிடுகிறது.
மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்டங்களில் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை இதுபோன்ற ரயில்களில் ஒரு ரயிலோ அல்லது ஒரு வாராந்திர ரயில் சேவை கூட இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் தென்மாவட்ட ரயில் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களை போல தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.