Home » சினிமா செய்திகள் » யாருமே இல்லாத கடையில் டீ ஆத்த போகும் தியேட்டர் ஓனர்கள்.. ரசிகர்கள் வருவாங்கன்னு நம்புறீங்க?
cinema2

யாருமே இல்லாத கடையில் டீ ஆத்த போகும் தியேட்டர் ஓனர்கள்.. ரசிகர்கள் வருவாங்கன்னு நம்புறீங்க?

ரசிகர்களின் பெருமளவு பொழுதுபோக்கு அம்சமாக இருந்த தியேட்டர்கள் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. இதனால் பொழுதுபோக்கு அம்சங்களை வேறுவிதமாக மாற்றி கொண்டார்கள் ரசிகர்கள்.

இனி தியேட்டர்களில் பெரிய படங்களை தவிர சிறு பட்ஜெட் படங்களை ரசிகர்கள் பார்ப்பார்களா என்பது சந்தேகம் தான் என்கிறது ஒரு கூட்டம். நல்ல படமாக இருந்தால் கண்டிப்பாக வருவார்கள் என்கிறது இன்னொரு கூட்டம்.

ஆனால் உண்மையில் மத்திய அரசு கொடுத்துள்ள ஒப்புதலின்படி தியேட்டரில் 25 சதவீதம் மக்கள் மட்டுமே தற்போதைக்கு படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்கிற மாதிரி ஒரு அறிவிப்பை கொண்டு வந்துள்ளனர்.

ஆயிரம் பேர் உட்காரக்கூடிய திரையரங்குகளில் சுமார் 200 முதல் 300 பேர் மட்டுமே படம் பார்க்கும் விதமாக அந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றனர்.

அதேபோல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தியேட்டரில் இருக்கும் மக்களுக்கு எப்படி வேண்டுமானாலும் நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. நாளுக்கு நாள் நோய் தீவிரம் மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.

தியேட்டர்காரர்களும் இந்த சமயத்தில் தியேட்டர் திறந்தால் இன்னும் கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் நிலைமையில் யாரும் இல்லை என்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் அதிகமாக பார்க்க முடிகிறது.

பெரிய நடிகர்களின் படம் என்றால் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை சுமார் 2000 வரை நிற்பதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது என்கிறார்கள். ஒரு குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக முதல் மூன்று நாட்கள் மட்டுமே ஒரு படத்தின் மொத்த வசூல் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப் பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

இதைக் கேட்ட நெட்டிசன்கள், யாருமே இல்லாத கடையில யாருக்கு இனி டீ ஆத்த போறீங்க என கிண்டலடித்து வருகின்றனர்.