Templates by BIGtheme NET
WASTE WATER

மேம்பால பணியால் பாதிப்பு மார்த்தாண்டத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

மார்த்தாண்டம், ஜன. 12: மார்த்தாண்டத்தில் ₹142 கோடியில் தென்னிந்தியாவிலேயே நீளமான இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்துக்கான பில்லர் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. பாலம் பணி நடப்பதால் மார்த்தாண்டத்தில் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. பாலம் பணிக்காக சாலையில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் உள்ள நடைபாதைகள், கழிவுநீர் ஓடை, வடிகால்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.

பம்மத்தில் இருந்து மார்த்தாண்டம் வரும் சாலையில் உள்ள கழிவு நீர் ஓடை பழைய தியேட்டர் சந்திப்பில் சிறுபாலம் வழியாக சாலையை கடந்து அட்டக்குளம் வழியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றை சென்றடைகிறது. இதில் அந்த பகுதியில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள், மார்க்கெட், நிறுவனங்களில் இருந்து வரும் கழிவு நீர் செல்கிறது.

இந்த கழிவு நீரோடை சேதம் அடைந்துள்ளதால் கழிவு நீர் ஓட்டம் தடைபட்டுள்ளது. இதனால் பழைய தியேட்டர் சந்திப்பில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. பல நாட்களாக கழிவுகள் தேங்கி கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு, புழுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் பெரும் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பாலம் பணி நடப்பதால் நாகர்கோவில் திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு முக்கிய இடமாக மாறியுள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காகவும், பிற தேவைக்காகவும் இங்கு நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. எனவே கழிவு நீரோடையில் உள்ள அடைப்பை சரி செய்து இங்கு நிலவும் சுகாதார கேட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.