Templates by BIGtheme NET
nanjil-murugesan-arrested-in-kanyakumari

முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நள்ளிரவில் கைது

நாகர்கோவில், ஏப்.16: அனுமதியின்றி மது விற்றதாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று டாஸ்மாக் கடையை மூடி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் பழையாற்றின்கரையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் மற்றும் ஒரு பார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயிற்சி ஏஎஸ்பி ஜவஹர் தலைமையிலான போலீசார் இந்த டாஸ்மாக் பாருக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

இதில் அங்கிருந்து 21 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, அனுமதியின்றி மது விற்றதாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், கோபால், இளங்கோ, பிரபு உள்ளிட்ட 4 பேரை கைது செய்து வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு அவர்களை விடுவித்தனர்.இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை அமைந்துள்ள வளாகத்துக்கு வந்த நாஞ்சில் முருகேசன், காம்பவுண்டின் நுழைவாயில் கேட்டை இழுத்து மூடி கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து அவரும் அவரது ஆதரவாளர்களும் டாஸ்மாக் கடை அமைந்திருந்த பகுதியின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அனில்குமார், மோகன அய்யர் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.ேமலும், டாஸ்மாக் அதிகாரிகளும் வந்தனர். இதில் ஒரு வாரத்தில் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து நாஞ்சில் முருகேசன் போராட்டத்தை கைவிட்டார். அதன்பிறகு டாஸ்மாக் கடைகள் திறந்து செயல்பட்டன.

சோதனைக்கு காரணம் எம்.பி.யா?
இதுகுறித்து நாஞ்சில் முருகேசன் கூறியதாவது:

இப்பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்திருக்கும் பகுதி எனக்கு சொந்தமான இடமாகும். நேற்று முன்தினம் நள்ளிரவு நான் இங்கு தூங்கி கொண்டிருந்தேன். அப்போது பயிற்சி ஏஎஸ்பி ஜவஹர், சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் மற்றும் போலீசார் சோதனையிடுவதாக கூறி அத்துமீறி என் கடைக்குள் நுழைந்தனர். மேலும், அவர்கள் ஒரு பக்கெட்டில் மதுபாட்டில்களை வைத்து கொண்டு வந்தனர். பின்னர் கடையில் சோதனையிடுவதாக கூறி, அவர்கள் கொண்டுவந்த மதுபாட்டில்களை இங்கு பிடித்தது போல் காண்பித்தனர். மேலும் கடையில் இருந்த என்னையும், அங்கு படுத்திருந்த 3 பேரையும் பிடித்து நள்ளிரவில் காவல் நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர்.எனது கடையில் 9 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் போலீசார் பக்கெட்டில் மது பாட்டில்களை உள்ளே கொண்டு வருவது பதிவாகி இருக்கிறது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ஏஎஸ்பியிடம் கேட்டதற்கு எம்பி சொல்லிதான் வந்ேதாம் என்கிறார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்கள் கட்சியை சேர்ந்த எம்பியே இப்படி செய்வது வேதனையளிக்கிறது. நான் இந்த கட்சிக்கு எவ்வளவோ செலவு செய்துள்ளேன். நான் தொழிலதிபராகவும், எம்எல்ஏவாகவும் இருந்துள்ளேன். இப்படி தான் எனக்கு வருமானம் வர வேண்டும் என்று அவசியமில்லை. தமிழகமெங்கும் நெடுஞ்சாலை அருகில் டாஸ்மாக் பார் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட போது நான் எனது சொந்த இடத்தில் டாஸ்மாக் நடத்தி கொள்ள அனுமதியளித்தேன். அப்படி நான் செய்ததற்கு உரிய அவமானத்தை இப்போது எங்கள் கட்சி எம்பியாலேயே அனுபவித்து விட்டேன். எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு நான் தற்கொலை தான் செய்ய வேண்டும். எங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும் போது எனக்கு இந்த தொந்தரவு என்றால் இனி இங்கு இருந்து என்ன செய்வது. எனவே, எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு முன் எனக்கு தர வேண்டிய வாடகை பாக்கியை தர வேண்டும். மேலும், என் மீது பொய் வழக்கு போட்ட பயிற்சி ஏஎஸ்பி ஜவஹர், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.