Home » குமரி செய்திகள் » முந்திரி தொழிலாளர்கள் காலநிவாரணம் கேட்டு மா.கம்யூ போராட்டம்.
04

முந்திரி தொழிலாளர்கள் காலநிவாரணம் கேட்டு மா.கம்யூ போராட்டம்.

திருவட்டாரில் முந்திரி தொழில் வாழ்வாதரத்தை வலியுறுத்தி மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய சங்க தலைவர் ஜோஸ் மனோகரன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் வில்சன், தமிழ்நாடு முந்திரி பருப்பு தொளிலாளர்கள் சங்க செயலாளர் சிங்காரன், துணைச் செயலாள் தங்கையன், சிஐடியு மாநில செயாளர் ஐடா ஹெலன், தங்க மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், ஸ்டாலின் தாஸ், விஸ்வம்பரன், சரோஜினி, ஆகியோர் கலந்து கெண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட சிபிஐ எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை பேசியதாவது:

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு காலம் கடத்தாமல் பஞ்சப்படி உயர்வினை வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை கிடைத்திட வசதியாக கச்சா முந்திரியை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். போனஸ் பிராவிடன் பண்ட் கிராஜுவட்டி சட்டங்கள் தற்போது முலாறிகளுக்கு ஆதரவாக உள்ளது. இதை மாற்றி தொழிலாளர்கள் பயன் பெறும் விதம் செயல்படுத்த வேண்டும். ஏதேனும் காரணத்தால் வேலை இழப்பு எற்பட்டால் தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால ரொக்க தொகை நிவாரணம் உள்ளிட்டவை வழங்கிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாதுரை பேசினார்.