பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் இஸ்ரேல்
578738

மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் இஸ்ரேல்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலில் நாடு முழுவதும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் அரசு கூறுகையில், “இஸ்ரேலில் இரண்டாம் கட்டக் கரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி ஊரடங்கு அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நம்முடைய இலக்கு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதுதான். அதன் பரவலைத் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் கரோனாவால் 1,56,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,128 பேர் கரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர். 1,126 பேர் பலியாகி உள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2 கோடிக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.