Templates by BIGtheme NET
kanyakumari-damaged-roads

மார்த்தாண்டம் சுற்று வட்டாரத்தில் பழுதான சாலைகளால் பொதுமக்கள் அவதி

மார்த்தாண்டம், ஏப். 16: குமரி மேற்கு மாவட்ட பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் குளங்கள் உள்பட நீர்நிலைகள் ஓரளவு நிரம்ப தொடங்கி உள்ளன. வெப்பநிலையும் சற்று குறைந்துள்ளது. இந்த மழையால் ஏற்கனவே பழுதடைந்து காணப்பட்ட ரோடுகள் மேலும் சேதமடைந்து வருகின்றன.ஓட்டை உடைசல் பஸ்களில் பயணிகள் மிகுந்த சிரமங்களுடன் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. ரோடுகளில் மழை நீரோடு, சாக்கடை கழிவுகளும் கலந்து வருவதால் டூ-வீலர்கள் போன்ற வாகனங்களில் செல்கின்றவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதி சாலைகள் பழுதடைந்த நிலையில், தற்போது மழைநீர் தேங்கி மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு கடும் இடையூறாக விளங்கி வருகின்றன.மேம்பால பணி நடந்து வருவதால் தேசிய நெடுஞ்சாலை சேறும், சகதியுமாக உள்ளது. அதே போல வடக்குச்சாலை உள்பட சுற்றுவட்டார சாலைகள் மழையால் தற்போது பல இடங்களில் உழுதுபோட்ட வயல்போல காட்சியளிக்கின்றன. பழுதடைந்த சாலைகளை செப்பனிட பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தியும், மழை பெய்வதற்கு முன்பு செப்பனிட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் தற்போது சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது. பொது மக்களின் அவலநிலையை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்களா? என எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.