Home » குமரி செய்திகள் » மார்த்தாண்டம் அருகே போதைப் பாக்கு விற்பனை 2 பேர் கைது
download

மார்த்தாண்டம் அருகே போதைப் பாக்கு விற்பனை 2 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே தடைசெய்யப்பட்ட போதை பாக்கு விற்பனை செய்ததாக போலீசார், இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.

தடை செய்யப்பட்டுள்ள போதை பாக்குகளை விற்பனை செய்ய கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. இதனால, இளைஞர்கள் மட்டுமன்றி சிறுவர்கள் கூட இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் போதை பாக்கு விற்பனை அதிகரித்து இருப்பதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மார்த்தாண்டம் போலீஸ் எஸ்.ஐ மகேஷ்வரராஜ் தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அங்கு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கோபாலன் என்பவரை கைது செய்த போலீசார் அங்கு வைக்கப்பட்டிருந்த போதை பாக்குகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று, மார்த்தாண்டம் அருகே பாகோடு பாளையங்கெட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைதொடர்ந்து, போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த பாலஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.