Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » மார்த்தாண்டம் அருகே சுமை வாகனத்துக்கு தீ வைப்பு
fired

மார்த்தாண்டம் அருகே சுமை வாகனத்துக்கு தீ வைப்பு

மார்த்தாண்டம் வியாழக்கிழமை இரவு அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சுமை வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மார்த்தாண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன் 51. இவர் சுமை வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தாராம். இந்நிலையில் நள்ளிரவில் சுமை வாகனத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், அதன் இருக்கைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து வில்சன், வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இது குறித்து புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.