Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் தம்பிதுரை பேட்டி
Coalition-rule-in-the-middle-Interviewing-the-Thambidurai

மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் தம்பிதுரை பேட்டி

கரூர்,

கரூரில் நேற்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும். இந்த கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும். இதுவரை மத்திய அரசில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்பட்டது. அதனால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டு கொண்டே இருந்தோம். இனி அந்த நிலை மாறி வாங்கும் சூழல் ஏற்படும். இதுவரை மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு தர வேண்டி உள்ளது. இனி ரூ.50 ஆயிரம் கோடி கூட கேட்டு பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.