Templates by BIGtheme NET

மக்களின் பிரச்சினைகளுக்கு ரஜினியிடம் என்ன தீர்வு இருக்கிறது?

புதுடெல்லி,

மக்களின் பிரச்சினைகளுக்கு ரஜினிகாந்திடம் என்ன தீர்வு இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மார்க்கண்டேய கட்ஜூ

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது வலைத்தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி நேற்று எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் தென்னிந்தியர்கள் மீது மிகுந்த அபிப்பிராயம் வைத்திருக்கிறேன். ஆனால், அவர்களது முட்டாள்தனமான சித்தரிப்பையும், திரை நட்சத்திரங்களை தெய்வங்களாக்குவதையும்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்த காலகட்டத்தில் (1967-68) ஒரு முறை சில தமிழ் நண்பர்களுடன் சிவாஜி கணேசன் நடித்த படத்தைப் பார்க்க சென்றிருந்தேன். அந்தப் படம் தொடங்கியபோது, ஆரம்பத்தில் சிவாஜிகணேசனின் பாதங்களை (பாதங்களை மட்டுமே) காட்டினார்கள். ஆனால் அதைப் பார்த்தே ரசிகர்கள் வெறித்தனமாகி விட்டார்கள்.

ரஜினியிடம் என்ன இருக்கிறது?

இப்போது, ரஜினிகாந்த் மீது தென்னிந்தியர்கள் பலரும் பைத்தியமாக இருக்கிறார்கள். அவர்களில் இன்னும் சிலர், அவர் அரசியலில் குதிக்க வேண்டும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால் ரஜினிகாந்திடம் என்ன இருக்கிறது?

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார பராமரிப்பின்மை, விவசாயிகளின் துயரங்கள் உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு அவரிடம் என்ன தீர்வு இருக்கிறது? அவரிடம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்.

பிறகு, எதற்காக அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்?

அமிதாப்பச்சனை போன்று அவரிடம் தலையில் ஏதும் இல்லை.

இவ்வாறு அதில் மார்க்கண்டேய கட்ஜூ எழுதி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*