Home » குமரி செய்திகள் » மகாராஜபுரத்தில் கருத்தடை விழிப்புணர்வு பேரணி
06

மகாராஜபுரத்தில் கருத்தடை விழிப்புணர்வு பேரணி

ஆண்களுக்கான கருத்தடை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாய்சேய் நலத்தை மேம்படுத்தி பிறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் கடந்த 1956 முதல் குடும்ப நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குடும்பநல அறுவை சிகிச்சை முறையை பெண்களே அதிகமாக கடைபிடித்து வருகின்றனர். இருதயநோய், நீரழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பெண்கள் பாதிக்கப்படும் போது பெண்கள் அறுவை சிகிச்சை செய்ய தகுதியற்றவர்களாகி விடுகின்றனர். இதுபோன்ற சந்தர்பங்களில் மனைவியை சிரமப்படுத்த விரும்பாத ஆண்கள் நவீன முறையில் தழும்பில்லாத வாசக்டமி குடும்ப நல அறுவை சிகிச்சை முறை செயல்படுத்தபட்டு வருகிறது.

ஆனால் இந்த அறுவை சிகிச்சையை செய்ய ஆண்கள் முன்வருவதில்லை. எனவே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகஸ்தீஸ்வரம் யூனியன், மகாராஜபுரம் பஞ்., வாசக்டமி கருத்தடை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மகாராஜபுரம் பஞ்., தலைவர் இசக்கிமுத்து தொடங்கிவைத்தார். துணை தலைவர் பழனிகுமார், உறுப்பினர்கள் ராஜம், பாலஜோதி, அனீஸ்வரி, சுயம்புலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணி மகாராஜபுரம் பஞ்., பகுதியில் சென்றது.