Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » போலீசை கண்டித்து பா.ஜ. ஆர்ப்பாட்டம்
protest

போலீசை கண்டித்து பா.ஜ. ஆர்ப்பாட்டம்

தக்கலை, ஜன.12: பத்மநாபபுரம் நகர பா.ஜ. சார்பில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் தக்கலையில் நடைபெற்றது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவாசாயிகளுக்காக போராட்டம் நடத்திய பா.ஜ. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர தலைவர் ஸ்ரீகுமார், பொது செயலாளர்கள் கோபகுமார், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் சகுமாரன், மாவட்ட துணைத்தலைவர் குமரி ரமேஷ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.