Templates by BIGtheme NET
nilavempu-kashayam

போதிய அளவு இருப்பு இருக்கிறது குமரியில் 5 லட்சம் பேருக்கு நில வேம்பு கசாயம் வினியோகம் சித்த மருத்துவ அலுவலர் எலிசா தகவல்

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் நில வேம்பு கசாயம் வினியோகத்தை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 5ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர்ந்து 3 நாட்கள் நில வேம்பு கசாயம் வினியோக்கும் முகாம் நடந்தது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கும் நில வேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வியாழன் தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் சித்த மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நில வேம்பு கசாயம் வினியோகம் செய்தனர். தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எலிசா கூறுகையில், குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடு, வீடாகவும், பள்ளிகள் வாரியாகவும் சென்றும், பொது இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யும் பணி நடக்கிறது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோட்டாரில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் எந்த நேரமும் நில வேம்பு குடிநீர் கிடைக்கும். மாவட்டத்தில் இதுவரை சுமார் 5 லட்சம் பேருக்கு நில வேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்க பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஷெலின்ராணி தலைமை வகித்தார். நாகர்கோவில்நகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் கலந்து கொண்டு நிலவேம்பு கஷாயம் மாணவ மாணவியருக்கு வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் சீதா முருகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*