Home » சினிமா செய்திகள் » பொள்ளாச்சி சம்பவத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்
I-will-fight-for-Pollachi-incident-Actress-Srireddy

பொள்ளாச்சி சம்பவத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியும் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-
“பொள்ளாச்சி சம்பவம் 7 வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன்.

விரைவில் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.