Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » பொருளாதார குளறுபடிகளை சரிசெய்ய ரூ.3½ லட்சம் கோடி பிரதமர் மோடிக்கு தேவைப்படுகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
PM-Narendra-modi-needs-Rs-36-lakh-crore-from-RBI-to-fix

பொருளாதார குளறுபடிகளை சரிசெய்ய ரூ.3½ லட்சம் கோடி பிரதமர் மோடிக்கு தேவைப்படுகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி:

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைமுக மோதலாக உருவெடுத்து இருக்கிறது. இந்த பிரச்சினையில் ரிசர்வ் வங்கிக்கு ஆதரவாக ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக உள்ள ரூ.9 லட்சத்து 59 ஆயிரம் கோடியில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குமாறு நிதி அமைச்சகம் கேட்டு இருப்பதாகவும், இது மொத்த கையிருப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான தொகை என்றும் ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.

இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, தனது பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய பிரதமர் மோடிக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்றும், இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் உறுதியாக நின்று தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். #NarendraModi #RBI #RahulGandhi