Templates by BIGtheme NET
Home » சற்று முன் » பொருந்தாத காதல் – வீட்டை விட்டு ஓட்டம் 17 வயது சிறுவனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட 28 வயது இளம்பெண் கைது
A-28yearold-young-women-arrested

பொருந்தாத காதல் – வீட்டை விட்டு ஓட்டம் 17 வயது சிறுவனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட 28 வயது இளம்பெண் கைது

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் லாக் நகரை சேர்ந்தவர் சவிதா என்ற வசந்தி (வயது 28). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் வாழ்ந்து வந்தார். 2-வது கணவர் பெங்களூருவில் வேலை பார்க்கிறார். வசந்தி தனது 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் 17 வயது சிறுவனுடன் வசந்திக்கு காதல் ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தனது உறவினரை பார்க்க சென்றபோது, வசந்தி அந்த 17 வயது சிறுவனை சந்தித்தார். பார்த்தவுடன் காதல் மலர்ந்தது. ஆஸ்பத்திரியிலேயே இருவரும் மறைவான இடத்தில் உறவு கொண்டதாக தெரிகிறது.

ஊர் ஊராக உல்லாசம்

பொருந்தாத இந்த காதல் இருவரையும் வாழ்க்கையில் இணைத்தது. வசந்தி தனது 2-வது கணவரையும் தூக்கி வீசிவிட்டு, தனது குழந்தைகளையும் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த 17 வயது சிறுவனோடு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். சிறுவனை பல ஊர்களுக்கு அழைத்து சென்று வசந்தி உல்லாசமாக சுற்றி திரிந்துள்ளார்.

சிறுவனின் பெற்றோர் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வசந்தியிடம் இருந்து தங்கள் மகனை மீட்டு தருமாறு புகாரில் பெற்றோர் தெரிவித்திருந்தனர். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி விசாரணை மேற்கொண்டார். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வெளியூரில் சுற்றி திரிந்த வசந்தியையும், சிறுவனையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

போக்சோ சட்டம் பாய்ந்தது

17 வயது சிறுவனை காதல் வலையில் விழவைத்து, தனது ஆசையில் சிக்கவைத்து தனது இச்சைக்கு பயன்படுத்தி கொண்டதாக வசந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வசந்தி நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பொருந்தாத காதலால் வாழ்க்கையில் தடம் புரண்ட வசந்தி சிறைக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 17 வயது சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.