Home » வர்த்தகம் செய்திகள் » பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் தேவையில்லை.. ஆனால் அரசிடம் உள்ள பங்குகளை குறைக்க முடியும்…!
image 21

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் தேவையில்லை.. ஆனால் அரசிடம் உள்ள பங்குகளை குறைக்க முடியும்…!

நாட்டின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது. ஆனால் அதன் பங்குகளை இந்தியர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம், அரசின் பங்குகளை 26 சதவீதமாக குறைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் வாரியத் தலைவர் சதீஷ் மராத்தே ஜூலை 25 அன்று தெரிவித்துள்ளார்.

வங்கி தேசியமயமாக்கலின் 51-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்தரங்கின் போது சதீஷ் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் பொது துறை வங்கிகளின் உரிமையானது பொதுமக்களிடம் இன்னும் பெரியளவில் செல்ல வேண்டும். அவர்கள் அரசாங்க பங்குதாரர்களாக இருக்க வேண்டும்.மிகப்பெரிய இழப்பு
கடந்த 51 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பை நீக்குவது ஒரு மிகப்பெரிய இழப்பு. உயர் நிர்வாகத்திற்கு பங்குகளை வழங்குவது சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சதீஷ் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளுக்கு மத்தியில், நமது நாடு ஏழை நாடாகவே உள்ளது. மேலும் நிதி அணுகலை அதிகமாக்க முயற்சிகளும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியை சந்தித்துள்ளன என்றும் கூறியுள்ளார்.