Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » பேஸ்புக் உடன் போட்டிபோட கூகிள் நிறுவனத்தின் புதிய திட்டம்..!
facebook and google

பேஸ்புக் உடன் போட்டிபோட கூகிள் நிறுவனத்தின் புதிய திட்டம்..!

சமுக வலைதளப் பிரிவில் கூகிள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் காரணத்தால் பேஸ்புக் நிறுவனத்திற்குப் போட்டியாகவும், இளைஞர்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெற்ற ஸ்னாப்சாட் நிறுவனத்தை வாங்க கூகிள் திட்டமிட்டு வருகிறது.

எதற்காக இந்தத் திடீர் முயற்சி..?

கூகிள் ஆஃபர்

2016ஆம் ஆண்டு ஸ்னாப்சாட் நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இறங்குவதற்கு முன்பாகச் சுமார் 30 பில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கூகிள் இந்நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தது.

ஐபிஓ..

பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்டிருந்த ஸ்னாப்சாட் கூகிள் ஆஃபரை நிராகரித்து. அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக்னாலஜி நிறுவனங்களுக்கு எப்போது மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் காரணத்தால், பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு 30 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்தது.

டமால்..

அதன் பின் பல்வேறு காரணங்களுக்காகவும், பேஸ்புக் நிறுவனத்தின் தொடர் ஆதிக்கத்தாலும் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்புப் பாதியாக ஆதாவது 15 பில்லியன் டாலராகக் குறைந்தது.

செய்தி..

2016ஆம் கூகிள் ஆஃபர் குறித்த செய்து தற்போது வெளியானதில் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று 2.3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

பேச்சுவார்த்தை

இந்த உயர்வு இரு நிறுவனங்கள் மத்தியிலுமே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள காரணத்தால், கூகிள் ஸ்னாப்சாட் நிறுவனத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.