Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடுகிறது மைக்ரோமேக்ஸ்
micromax-news

பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடுகிறது மைக்ரோமேக்ஸ்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் புதிதாக பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா தெரிவித்துள்ளார்.

ராகுல் சர்மாவின் நிறுவனமான ரெவோல்ட் இன்டெலிகார்ப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனி நபர் போக்குவரத்துக்கு கட்டுபடியாகும் விலையிலான வாகனத்தை தயாரிக்கும் என்று குறிப்பிட்ட அவர் இதற்குரூ. 500 கோடி முதலீடு செய்யப்போவதாக தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேட்டரி வாகன தயாரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக அவர்குறிப்பிட்டார்.

மேலும் தற்போது வெளி வந்துள்ள வாகனங்கள் திருப்தி கரமாக இல்லை என்றும், தங்கள் நிறுவனத் தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் மேம்பட்டதாக இருக்கும் என்றார்.