பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » பேச்சிப்பாறை முதல் காக்கச்சல் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு
48965799_s-e1536075667858

பேச்சிப்பாறை முதல் காக்கச்சல் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

குலசேகரம்: மாா்த்தாண்டம் – பேச்சிப்பாறை சாலையில் காக்கச்சல்-பேச்சிப்பாறை இடையே நடைபெற்று வரும் சாலைப் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் தக்கலை நெடுஞ்சாலைத்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் – பேச்சிப்பாறை சாலையில் காக்கச்சல்-பேச்சிப்பாறை இடையே 2.4 கி.மீ. தொலைவுக்கு ரூ. 77 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணியினை திருநெல்வேலி மண்டல நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் சாந்தி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, கோட்ட பொறியாளா் பி. பாஸ்கரன், உதவி பொறியாளா் என். தனேஷ் சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.